Friday, October 2

சோதனை காலம் - பகுதி 1

அப்ப அப்ப கொஞ்சம் படிச்சு இருக்கலாம்ல ?
அப்படினு சொன்னா exam வந்துட்னு அர்த்தம்..

இது ஏன்டா இப்ப வந்தது?என எண்ண தோன்றும்
பருவ தேர்வுகள் ஓவ்வொரு ஆறு மாதங்களுக்கு
ஒரு முறை நாம் எல்லாம் விரும்பினாலும் ,விரும்பாவிட்டாலும்
வரும் ..

காலையில் ஜாலியா collge ,மாலையில் Ground ,வந்ததும் சாப்பாடு ,
பிறகு நிம்மதியா தூக்கம் , (படிப்பதுக்கு எங்கங்க  Time ?)
என அன்றாடம் பொழுதை கழிக்கும்
ஆவரேஜா பொழுதை கழிக்கும் என்னை போன்றவர்களுக்கு
கொஞ்சம் கடினமான காலம்........

இனி நாமனா exam க்கு எப்படி படித்தோம் என்பதை பார்க்க
காரைக்குடிக்கு போகலாம்..வாங்க..

விடுதியில் இருந்து தொடங்குகிறேன்....

எழில் -  exam  அன்னிக்கு முதல் நாள் ,இரவு முழுவதும் படித்து
விட்டு ,காலையில் எட்டு மணி அளவில் மாமு" இப்போது தான்டா
5 வது unit start பண்ணி இருக்கேன் டா என cool  சொல்லுவான்..
அதே மாதிரி , இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக தேர்வு எழுதியது
கிடையாது..ஆனால் ,Result பத்தி தான் உங்களுக்கு தெரியுமே'

வெற்றி - Exam Time ல ரொம்ப Hard work..Exam time la உண்மையில்வெற்றி சாரை பார்த்து ( Starting la இப்படி தான் கூப்பிட்டேன் ) ..அசந்து போய்
இருக்கேன், ஆனால் கூடவே Bad luck வருவதாக நினைக்கிறேன்

ராஜ்மோகன் - பார்டனர் " பீதியை கிளப்பாதிங்க.பீதியாவுது" .இந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருது..இருந்தாலும் Dynamics ச ,First time la  தூக்கிட்ங்க பார்டனர்.நிங்க பெரிய ஆளு தான் பார்டனர்?

பிஜ்மோகன்- எங்க ரும்ல படிப்பாளி புள்ள ..பாட புத்தகத்தை விட சாண்டியல்ன்  
புத்தகம் படித்த நேரம் தான் அதிகம்.. கூடவே மதிப்பென்ணும் அதிகம்...

ஜயராஜ் - week end ல காரைக்குடில இருந்தால் அது
exam time தான்.கொஞ்சம் அல்ல அதிகமாக சென்டிமென்ட்
type. Hall ticket - பிள்ளையார் பட்டி முதல் அரியங்குடி வரை
பயணிக்கும் .கடைசியாக விமான டிக்கெட் மற்றும் வீசா
பயணித்தாக தகவல்...( சரியா பார்ட்ணர் ?)

ராமசந்திரன் - பக்காவ Plan  பண்ணி படிக்கற படிப்பாளி
எனக்கு கணிதத்தில் வந்த சந்தேகம் அனைத்தேயும் Solve
பண்ணியவர்..(இப்போதும் கணிததத்தில் pass ஆனது எனக்கு சந்தேகம் தான்)


ராமநாதன் சார் - இப்போதும் இப்படி தான் அழைக்கிறேன்.
Exam Time ல ரொம்ப Hard work.. கூடவே Bad luck
க்கும் பயணிக்கும்..பேருந்தில் நடந்த விபத்து வரை...

ரமேஷ் - அண்ணா university ணு அழைப்போம் ..இவர் exam
hall exam எழுவது 2 வது முறை தான்..ஆம் ..ஹாஹ்டலில்
முதல் exam எழுதிவிடுவான்.படித்தை எழுதிபார்க்கும் ரகம்..

திருச்சி ரமேஷ் - week end ல காரைக்குடில இருந்தால் அது
exam time தான் (.ஜயராஜ் மாதிரி ).exam time லயும் மற்ற time
போல ஜாலியா இருக்கிற ஆள்.

தீபன் - தீபன்  மற்றும் 90105413009 & 90105413012 என்ற
இரண்டு அறிவாளிக்கு மத்தியில் மாட்டி கொண்ட நானும் படிப்பதில்
ஓரெ ரகம் தான்...அதை பற்றியும்  மற்றும் பல நண்பர்கள் படித்தையும்
அடுத்த முறை காணலாம்....

1 comment:

  1. partner you are realy great.... we are expecting more from you ... keep writing .. take care machi....

    ReplyDelete

இத பத்தி சொல்லுகளேன்...