Saturday, October 24

கல்லூரி விடுதி

கல்லூரி விடுதி யில் அதிகம் ரசித்த பாடல் நீங்களும் கேட்டு பாருங்கள்... நல்லா இருக்குல? உபயம் சீனியர் அண்ணண்கள் சீனி,ஜெய் அண்ணண் மற்றும் Rep அண்ணண் ,எல்லோரும் இப்ப எங்க இருக்காக? Phone நம்பர் இருந்தால் தாங்க?

Friday, October 16

தீபாவளி வாழ்த்துகள்



இந்த முறை தலை தீபாவளி கொன்டாடும்
வெற்றிவேல் - சுகந்தி குடும்பத்தினர்
ராமநாதன் குடும்பத்தினர்
மற்றும் சீவராம் குடும்பத்தினர்க்கு
தலை தீபாவளி வாழ்த்துகள்...

மேலும் நம்ப நண்பர்களில், வேறு யாரவது தலை
தீபாவளி கொன்டாடினால் அவர்களுக்கும்
தலை தீபாவளி வாழ்த்துகள்...
எனக்கு தெரிந்த வரை ,எழுதி இருக்கிறேன்.
பெயர் விட்டு இருந்தால் மன்னிக்கவும்..

கடைசியாக இந்த முறை தலை தீபாவளி கொன்டாத நம்ப நண்பர்கள் அனைவர்களுக்கும் அடுத்த தீபாவளி தலை தீபாவளியாக அமைய வாழ்த்துகள்...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

Friday, October 9

கல்லூரி சாலை


ஞாபகம் வருதே' ஞாபகம் வருதே''

ஆன்மீகம் - பகுதி ஒன்று

காரைக்குடியில் உள்ள பெரும்பாலான லாரி, ஆட்டோ , கார்
போன்றவற்றின் முகப்பில் கொப்புடையம்மன் துனை ஒரு வரி
எழுதப்பட்டுள்ளதை நாம் பார்த்து இருப்போம்..
ஆம்; நான் முதலில் பார்த்தபோது எங்கே இருக்கிறது இந்த
காரைக்குடி மக்களின் மனம் கவர்ந்த தேவதை என்ற ஆர்வம்
அகிகம்மானது.

கோயிலை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லியே ஆகனும்.

சினிமா நட்சத்திரங்கள் சிவாஜி,மணோரமா ,விக்ரம் ,விவேக் (?)
மீரா ஜாஸ்மீன் மற்றும் VVS  சங்க தலைவர் வடிவேலு வரை
சென்று காரைக்குடி அம்மனை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் எல்லா அம்மன் ஆலயங்களிலும் கருங்கல்லால் செய்யப்பட்ட மூலவரும்,உலோகத்தால் செய்யப்பட்ட உற்சவரும் இருப்பார்கள்..ஆனால் காரை மரங்கள் அதிகம் உள்ள காரைக்குடி யில் ( ஊர் பெயர் காரணம் )மூலவரும் , உற்சவரும் ஓன்றே தான்..பஞ்சலோகதத்தில் அழகாக வீற்று
இருப்பாள்..

மாற்று மதத்தவர் ஆட்சிக் காலத்தில் அம்மன் சிலைக்கு ஆபத்து ஏற்படுமோஎன்ற ஜயத்தில் பூஜை முடிந்ததும் கிளைகள் நிறைந்த மரப் பொந்தில் சிலையை  மறைத்து வைத்து விடுவார்கள்..கொப்பு என்றால் மரக் கிளை என்று பொருள்..அதனால் கொப்புடையம்மன் என்று பெயர் (  பெயர் காரணம்தான் )..

கல்லுக்கட்டி ( பஸ் ரூட் 2A) சார்ந்த ஒரு பெண்ணுக்கு கொப்புடையம்மன் மேல் தீராத பக்தி. கோயிலுக்கு பக்கத்தில்  ஊருணி ( குளம் ன்னு சொல்லுவார்கள்) அமைக்க வேண்டும் என்பது ஆசை.மிகவும் கஷ்டப்பட்டு அமைத்தாள்.இன்றும்
அந்த ஊருணி அவள் பெயரை நினைவுபடுத்துவது போல கல்லுக்கட்டி ஊருணி ,அந்த பகுதியும் கல்லுக்கட்டி என்றே அழைக்கபடுகிறது. முருகன் பாத்திர கடைசாரி கடல் (கடை போர்டு அப்படி தான் இருக்கும்) இருக்கிற  அந்த area தான் - இங்கு தான் முதலில் சாப்படுவதற்க்கு plate வாங்கினேன்.


மேலும் கொப்புடையம்மனின் கோபத்திற்கு காரணமாக (அது ஒரு தனிக் கதை ) இருந்த சங்கராபுரத்தில் - காரைக்குடி லிருந்து 4 km உள்ள காட்டம்மனும் (உண்மையில் அம்மன்  terror தான்..கொப்புடையம்மனின் கோபம் நியாயம்தான் ) சென்று வழிபட்டு வாருங்கள்..

கொப்புடையம்மனை வழிபட்டால் நீண்ட ஆயுளுடன் ,புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற பக்தர்களின் நம்பிக்கை. படிக்கும் போது ,ஞாயிற்று கிழமை காரைக்குடியில் இருந்தால் நான் தவறாமல் சென்ற ஆலயம் ..exam சமயத்தில் ஒவ்வொரு  தேர்வு முடிந்ததும் ( வேறு விதமா சொல்லனும்மான  தேர்வு சொதப்பலுக்கு பிறகு )ஆலயத்திற்குசென்று வந்தால் ரொம்பவே Relax ஆக இருக்கும்.....

கடந்த முறை லீவு க்கு ஊருக்கு வந்த போது முடிக்க வேண்டிய செயல்கள் என list இட்டதில் list லில் 38 செயலாக கொப்புடையம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் (மொத்தம் 76 செயல்கள்தான் ) கடந்த முறை நிறைவேறாமல் போன செயல்களில் இதுவும் ஓன்று..
அடுத்த முறை நிறைவேற கொப்புடையம்மன் அருள வேண்டும்.....

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது - இறை நம்பிக்கை இருந்தால் குடும்பத்தோடு கொப்புடையம்மன்  ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.. அப்படியே நம்ப கல்லூரியையும் பார்த்துட்டு வாங்க.............

நன்றி - : குமுதம் & ரமேஷ் அண்ணன்
        

Friday, October 2

சுவரொட்டி- 2


மோகன் க்கு திருமணம் முடிவாகி உள்ளது .அதற்கு 
வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்..

திருமண நாள் ;27.01.10

திருமணத்திற்கு வருக  வருக என வரவேற்கிறோம்..

அழைப்பிதழ்   விரைவில்.....

சோதனை காலம் - பகுதி 1

அப்ப அப்ப கொஞ்சம் படிச்சு இருக்கலாம்ல ?
அப்படினு சொன்னா exam வந்துட்னு அர்த்தம்..

இது ஏன்டா இப்ப வந்தது?என எண்ண தோன்றும்
பருவ தேர்வுகள் ஓவ்வொரு ஆறு மாதங்களுக்கு
ஒரு முறை நாம் எல்லாம் விரும்பினாலும் ,விரும்பாவிட்டாலும்
வரும் ..

காலையில் ஜாலியா collge ,மாலையில் Ground ,வந்ததும் சாப்பாடு ,
பிறகு நிம்மதியா தூக்கம் , (படிப்பதுக்கு எங்கங்க  Time ?)
என அன்றாடம் பொழுதை கழிக்கும்
ஆவரேஜா பொழுதை கழிக்கும் என்னை போன்றவர்களுக்கு
கொஞ்சம் கடினமான காலம்........

இனி நாமனா exam க்கு எப்படி படித்தோம் என்பதை பார்க்க
காரைக்குடிக்கு போகலாம்..வாங்க..

விடுதியில் இருந்து தொடங்குகிறேன்....

எழில் -  exam  அன்னிக்கு முதல் நாள் ,இரவு முழுவதும் படித்து
விட்டு ,காலையில் எட்டு மணி அளவில் மாமு" இப்போது தான்டா
5 வது unit start பண்ணி இருக்கேன் டா என cool  சொல்லுவான்..
அதே மாதிரி , இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக தேர்வு எழுதியது
கிடையாது..ஆனால் ,Result பத்தி தான் உங்களுக்கு தெரியுமே'

வெற்றி - Exam Time ல ரொம்ப Hard work..Exam time la உண்மையில்வெற்றி சாரை பார்த்து ( Starting la இப்படி தான் கூப்பிட்டேன் ) ..அசந்து போய்
இருக்கேன், ஆனால் கூடவே Bad luck வருவதாக நினைக்கிறேன்

ராஜ்மோகன் - பார்டனர் " பீதியை கிளப்பாதிங்க.பீதியாவுது" .இந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருது..இருந்தாலும் Dynamics ச ,First time la  தூக்கிட்ங்க பார்டனர்.நிங்க பெரிய ஆளு தான் பார்டனர்?

பிஜ்மோகன்- எங்க ரும்ல படிப்பாளி புள்ள ..பாட புத்தகத்தை விட சாண்டியல்ன்  
புத்தகம் படித்த நேரம் தான் அதிகம்.. கூடவே மதிப்பென்ணும் அதிகம்...

ஜயராஜ் - week end ல காரைக்குடில இருந்தால் அது
exam time தான்.கொஞ்சம் அல்ல அதிகமாக சென்டிமென்ட்
type. Hall ticket - பிள்ளையார் பட்டி முதல் அரியங்குடி வரை
பயணிக்கும் .கடைசியாக விமான டிக்கெட் மற்றும் வீசா
பயணித்தாக தகவல்...( சரியா பார்ட்ணர் ?)

ராமசந்திரன் - பக்காவ Plan  பண்ணி படிக்கற படிப்பாளி
எனக்கு கணிதத்தில் வந்த சந்தேகம் அனைத்தேயும் Solve
பண்ணியவர்..(இப்போதும் கணிததத்தில் pass ஆனது எனக்கு சந்தேகம் தான்)


ராமநாதன் சார் - இப்போதும் இப்படி தான் அழைக்கிறேன்.
Exam Time ல ரொம்ப Hard work.. கூடவே Bad luck
க்கும் பயணிக்கும்..பேருந்தில் நடந்த விபத்து வரை...

ரமேஷ் - அண்ணா university ணு அழைப்போம் ..இவர் exam
hall exam எழுவது 2 வது முறை தான்..ஆம் ..ஹாஹ்டலில்
முதல் exam எழுதிவிடுவான்.படித்தை எழுதிபார்க்கும் ரகம்..

திருச்சி ரமேஷ் - week end ல காரைக்குடில இருந்தால் அது
exam time தான் (.ஜயராஜ் மாதிரி ).exam time லயும் மற்ற time
போல ஜாலியா இருக்கிற ஆள்.

தீபன் - தீபன்  மற்றும் 90105413009 & 90105413012 என்ற
இரண்டு அறிவாளிக்கு மத்தியில் மாட்டி கொண்ட நானும் படிப்பதில்
ஓரெ ரகம் தான்...அதை பற்றியும்  மற்றும் பல நண்பர்கள் படித்தையும்
அடுத்த முறை காணலாம்....

Thursday, October 1

சுவரொட்டி-1


கல்ஃப் ஊட்டியான - சலாலாவில் (ஒமண் நாட்டில் )-
ரம்ஜான் விடுமுறை கொண்டாடத்தில்
நம்ப  உமாசங்கர் மற்றும் அருண்குமார் ( student No 1 )..


நண்பர்களின் சமீபத்திய புகைபடங்கள் வரவேகற்படுகின்றன.
சுவரொட்டியில் ஓட்டுவதற்கு..நம்ப blogயை சுவரொட்டியாக
பயன்படுத்தலாம்...நண்பர்களின் பிறந்த நாள் முதல் திருமண நாள்
வரை  நண்பர்களை இந்த blog  மூலம்  வாழ்த்துவோம்
புகைபடங்கள் அனுப்ப வேன்டிய  முகவரி :ermahesh80@gmail.com .

ACCET


Relive the good times ,we enjoyed
in our great campus..
Are you a member yet ?
Resigster on line today.
www.accet07.blogspot.com