Friday, October 9

ஆன்மீகம் - பகுதி ஒன்று

காரைக்குடியில் உள்ள பெரும்பாலான லாரி, ஆட்டோ , கார்
போன்றவற்றின் முகப்பில் கொப்புடையம்மன் துனை ஒரு வரி
எழுதப்பட்டுள்ளதை நாம் பார்த்து இருப்போம்..
ஆம்; நான் முதலில் பார்த்தபோது எங்கே இருக்கிறது இந்த
காரைக்குடி மக்களின் மனம் கவர்ந்த தேவதை என்ற ஆர்வம்
அகிகம்மானது.

கோயிலை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லியே ஆகனும்.

சினிமா நட்சத்திரங்கள் சிவாஜி,மணோரமா ,விக்ரம் ,விவேக் (?)
மீரா ஜாஸ்மீன் மற்றும் VVS  சங்க தலைவர் வடிவேலு வரை
சென்று காரைக்குடி அம்மனை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் எல்லா அம்மன் ஆலயங்களிலும் கருங்கல்லால் செய்யப்பட்ட மூலவரும்,உலோகத்தால் செய்யப்பட்ட உற்சவரும் இருப்பார்கள்..ஆனால் காரை மரங்கள் அதிகம் உள்ள காரைக்குடி யில் ( ஊர் பெயர் காரணம் )மூலவரும் , உற்சவரும் ஓன்றே தான்..பஞ்சலோகதத்தில் அழகாக வீற்று
இருப்பாள்..

மாற்று மதத்தவர் ஆட்சிக் காலத்தில் அம்மன் சிலைக்கு ஆபத்து ஏற்படுமோஎன்ற ஜயத்தில் பூஜை முடிந்ததும் கிளைகள் நிறைந்த மரப் பொந்தில் சிலையை  மறைத்து வைத்து விடுவார்கள்..கொப்பு என்றால் மரக் கிளை என்று பொருள்..அதனால் கொப்புடையம்மன் என்று பெயர் (  பெயர் காரணம்தான் )..

கல்லுக்கட்டி ( பஸ் ரூட் 2A) சார்ந்த ஒரு பெண்ணுக்கு கொப்புடையம்மன் மேல் தீராத பக்தி. கோயிலுக்கு பக்கத்தில்  ஊருணி ( குளம் ன்னு சொல்லுவார்கள்) அமைக்க வேண்டும் என்பது ஆசை.மிகவும் கஷ்டப்பட்டு அமைத்தாள்.இன்றும்
அந்த ஊருணி அவள் பெயரை நினைவுபடுத்துவது போல கல்லுக்கட்டி ஊருணி ,அந்த பகுதியும் கல்லுக்கட்டி என்றே அழைக்கபடுகிறது. முருகன் பாத்திர கடைசாரி கடல் (கடை போர்டு அப்படி தான் இருக்கும்) இருக்கிற  அந்த area தான் - இங்கு தான் முதலில் சாப்படுவதற்க்கு plate வாங்கினேன்.


மேலும் கொப்புடையம்மனின் கோபத்திற்கு காரணமாக (அது ஒரு தனிக் கதை ) இருந்த சங்கராபுரத்தில் - காரைக்குடி லிருந்து 4 km உள்ள காட்டம்மனும் (உண்மையில் அம்மன்  terror தான்..கொப்புடையம்மனின் கோபம் நியாயம்தான் ) சென்று வழிபட்டு வாருங்கள்..

கொப்புடையம்மனை வழிபட்டால் நீண்ட ஆயுளுடன் ,புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற பக்தர்களின் நம்பிக்கை. படிக்கும் போது ,ஞாயிற்று கிழமை காரைக்குடியில் இருந்தால் நான் தவறாமல் சென்ற ஆலயம் ..exam சமயத்தில் ஒவ்வொரு  தேர்வு முடிந்ததும் ( வேறு விதமா சொல்லனும்மான  தேர்வு சொதப்பலுக்கு பிறகு )ஆலயத்திற்குசென்று வந்தால் ரொம்பவே Relax ஆக இருக்கும்.....

கடந்த முறை லீவு க்கு ஊருக்கு வந்த போது முடிக்க வேண்டிய செயல்கள் என list இட்டதில் list லில் 38 செயலாக கொப்புடையம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் (மொத்தம் 76 செயல்கள்தான் ) கடந்த முறை நிறைவேறாமல் போன செயல்களில் இதுவும் ஓன்று..
அடுத்த முறை நிறைவேற கொப்புடையம்மன் அருள வேண்டும்.....

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது - இறை நம்பிக்கை இருந்தால் குடும்பத்தோடு கொப்புடையம்மன்  ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.. அப்படியே நம்ப கல்லூரியையும் பார்த்துட்டு வாங்க.............

நன்றி - : குமுதம் & ரமேஷ் அண்ணன்
        

No comments:

Post a Comment

இத பத்தி சொல்லுகளேன்...