விடுதியில் இருக்கும்போது அம்மாவிடம் இருந்து போன் வந்தால்முதலில் வரும் கேள்வி எப்படி இருக்க & சாப்பாடு எப்படி இருக்கு ?அது காரைக்குடி ஆனாலும் சரி. கல்ஃப் ஆனாலும் சரி
நான் முதன்முறையாக வீட்டைவீட்டு அதிக நாட்கள்( 5 நாட்கள் ) வெளியே இருந்தது காரைக்குடியில் தான்..மேலும் நான் வெஜிடேரியன்.(நம்பி தான் ஆகனும் )..வீட்டில் மட்டும்.இப்ப சரியா?
சரி Matter க்கு வருவோம்..இனி விடுதி சாப்பாடு பற்றி...
திங்கள் கிழமை அன்று காலை பிரட் பிடிக்கும்..மதியம் அது எந்த கிழமை மதிய சாப்பாடு பற்றீ தான் தெரியுமே..அது மாதிரி இரவு சாப்பாடு எதுவானாலும் ground la இருந்து நல்ல பசியுடன் வந்ததும் ஒரு பிடி தான்...செவ்வாய் கிழமை காலை பொங்கல் எனக்கு அல்ர்ஜி.( முதன்முறையாகவேறுவழியில்லாமல் பழகிய இடம் )..ஆனால் வடை o.kஎது எப்படி இருந்தாலும் ஞாயிற்று கிழமை கேசரிக்கு சரியா ராமானுஜனுடன் ஆஐராகி விடுவேன்..ராம்காட்ஷ்கு கேசரி பிடிக்காது..so எனக்கு double தான்..
பெரும்பாலும் மெஸ்க்கு போனால் திரும்பி வர ஒரு மணி நேரம் ஆகும்.கொஞ்சம் சாப்பாடு ,நிறைய அரட்டை???
கம்பன் இல்லத்தில் இருந்து திருவள்ளுவர் இல்லம் வரை நடந்து சென்ற சாப்பிடதருணங்கள் கேசரியை விட தித்திக்கும் தருணங்கள்..
மேலும் யார் முதலில் செல்கிறார்களோ அவர்களுக்கு நல்ல Plate..Plate எல்லாம் Public Property தான்..இருந்தாலும் Anna University ரமேஷ் Plate அதிகமா use பண்ணாதது ஒரு வருத்தம் தான்..
எது எப்படி இருந்தாலும் வெறும் 600 ருபாய்க்கு அவ்வளவு பேருக்கும்சாப்பாடு செய்தது ஒரு சாதனை..அதற்கு நம் கல்லூரி க்கும் & மெஸ் ஊழியர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..
அது சரி..லேடிஸ் Hostel la யும் அதே சாப்பாடு தானே..விபரம் சரியாக தெரிய வில்லை...
அதுமாதிரி அடிக்கடி மணி (Parter..எங்க இருக்கிங்க?) போன்ற காரைக்குடி நண்பர்கள்வீட்டில் சாப்பிடும் செட்டிநாட்டு சாப்பாடு தனிரகம்..ஆம்..விடுதி சாப்பாடு எல்லாம்வீட்டு சாப்பாடு ஆகாது..
இங்கே ,இப்போது ரம்ஜான் நோன்பு காலத்தில் , சாப்பாடு கிடைக்காமல் அலையும் சமயத்தில்சாப்பாடு பற்றி பதிவது நல்லாதான் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இத பத்தி சொல்லுகளேன்...